மாலே: தீவில் அரசியல் நெருக்கடியின் உச்சக் கட்டமாக முன்னாள் அதிபரும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக திங்கள் மாலை அதிபர் அப்துல்லா யாமீன் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தினார். பின்னர் உச்சநீதிமன்றத்தைச் சுற்றி வளைக்க அவர் துருப்புகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து கைது நடவடிக்கை தொடங்கியது. டுவிட்டர் மூலம் தேசிய போலிசார் வெளியிட்ட அறிவிப்பில் தலைமை நீதிபதி ஹசன் சாயித் ஹுசைன் உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல்லா சாயித், அலி ஹாமித் முகமட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரான முன்னைய அதிபர் மஹ்மூன் அப்துல் கயூமும் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறியது.
மாலத்தீவில் நீதிபதிகள் கைது; அவசரநிலை பிரகடனம்
1 mins read
-

