பிலிப்பீன்ஸ் அதிபரின் அதிரடி உத்தரவு

பிலிப்பீன்ஸ் அதிபரின் அதிரடி உத்தரவு

1 mins read
089b6b45-805b-4599-a379-9b006b1c52c9
-
Google News Preferred Icon

மணிலா: நீருக்கடியில் உள்ள நிலப்பகுதியில் கடல்சார்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே உத்தரவிட்டுள்ளார். பிலிப்பீன்சின் லுசோன் தீவுக்கு மேற்கு பிலிப்பீன்ஸ் ரைஸ் என்று அழைக்கப்படும் நிலப்பகுதி இடம்பெற்றுள்ளது. "பிலிப்பீன்ஸ் ரைஸ் எங்களுடையது. இதற்கு எதிர்மாறாக செயல்படுவதை இன்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் அதிபர் டுட்டர்டே.