தைவானில் நிலநடுக்கம்; பலரைக் காணவில்லை

1 mins read
09a7525d-b985-460b-9c6c-9023a80d6029
-

தைப்பே: தைவானை உலுக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந் ததாகவும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 225 பேர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இன்னும் 145 பேரைக் காணவில்லை என்று போலிசார் கூறியுள்ளனர். நிலநடுக்கத்தில் அப்பகுதியில் உள்ள நான்கு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஓரிரு கட்ட டங்கள் ஒரு பக்கமாகச் சாய்ந்தன. வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11.50 மணியள வில் தைவானின் கிழக்கு கட லோரப் பகுதிக்கு அப்பால் 20 கிலோ மீட்டர் தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள பல கட்டடங்கள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் ஹோட்டல்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமானோரை அவசரகால மீட்புப் பணியாளர் கள் காப்பாற்றினர். இருப்பினும் இன்னும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள உயர் மாடிக் கட்டடம் ஒன்று ஒரு பக்கமாக சாய்ந்ததால் அவசரகால மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர். அக்கட்டடத்தினுள் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி