வடகொரியாவுக்கு அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் எச்சரிக்கை

வடகொரியாவுக்கு அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் எச்சரிக்கை

1 mins read
Google News Preferred Icon

தோக்கியோ: வடகொரியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத கடுமையான தடைகளை அமெரிக்கா விதிக்கவிருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார். தோக்கியோ சென்றுள்ள திரு பென்ஸ், வடகொரியா மீது எத்தகைய தடைகள் விதிக்கப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆனால் வடகொரியா அதன் அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை உடனடியாக நிறுத்த அந்தத் தடைகள் வகை செய்யும் என்றும் அவர் கூறினார். தோக்கியோவில் திரு பென்ஸ் அவ்வாறு கூறியபோது ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயும் அவருடன் இருந்தார். திரு பென்ஸ் தோக்கியோ பயணத்தை முடித்துக்கொண்டு நாளை தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.