முகமூடி அணிந்து $244,000 மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை

முகமூடி அணிந்து $244,000 மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை

1 mins read
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: கோத்தா தாமான்சாராவிலுள்ள ஒரு கடைத்தொகுதியில் அமைந்துள்ள நகைக்கடையிலிருந்து 720,000 ரிங்கிட் ($244,000) பெறுமானமுள்ள நகைகளை முகமூடி அணிந்த மூவர் கொள்ளையடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அந்த மூவரும் நேற்று காலை 11.47மணிக்கு அந்தக் கடையினுள் நுழைந்து கொள்ளையடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய நபர்,

அங்கு பணிபுரிந்த பாதுகாவலரிடமிருந்த துப்பாக்கியைக் கைப்பற்றியதாக பெட்டாலிங் ஜெயா போலிஸ் துணை ஆணையர் முகமது ஸானி செ டின் கூறினார். மற்ற இருவரும் கடையிலிருந்த நகைகளைச் சுருட்டினர். அதன் பின்னர் போலி பதிவு எண் கொண்ட காரில் அந்த மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பினர். அவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.