காங்நுயிங்: தென்கொரியாவில் இன்று தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீச் சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. விளையாட்டாளர்கள் தங்குமிடத்திற்கும் ஊடகத் துறையினர் தங்குமிடத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் அச்சம்பவம் ஏற்பட்டது. தீ உடனே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தை முன்னிட்டு அந்தப் பகுதியில் இருந்த அனைவருக்கும் கைபேசியில் எச்சரிக்கை செய்தியை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதற்கிடையில், அந்தப் பகுதிகளில் இதுவரை 86 பேரை பாதித்துள்ள ஒரு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் ஏற்பாட்டாளர்கள் சிரத்தை எடுத்து வருகின்றனர்.
ஒலிம்பிக் நடைபெறும் பகுதியில் தீ
1 mins read

