டாக்கா: ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சேர வேண்டிய பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக பங்ளாதேஷின் பிரதமராக இரண்டு தவணைகள் பதவிவகித்த அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திருவாட்டி கலிடா ஸியாவிற்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் திரளாகக் கூடியிருந்த நீதிமன்ற அறையில் தீர்ப்பளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த னர். போலிசார் நீதிமன்றத்திற்கு வெளியில் கண்ணீர் புகையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர். தலைநகரின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் கலிடா ஸியாவிற்கு 5 ஆண்டு சிறை
1 mins read

