தோக்கியோ: வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தை முறிய டிக்க அமெரிக்கா அமைதியான முறையில் முயற்சி எடுக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் ராணுவ பலத்தையும் மக்களின் உறுதியையும் குறைத்து எடை போட வேண்டாம் என்றும் அவர் வடகொரியாவை எச்சரித்துள்ளார். தமது நாட்டின் ராணுவமும் தேசமும் தயாராக இருப்பதாக ஜப்பானின் யொகொடா ஆகாயப் படைத் தளத்தில் கூடியிருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஆற்றிய உரையில் திரு பென்ஸ் கூறினார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக ளில் கலந்துகொள்வதற்காக தென்கொரியாவிற்குப் புறப்படும் முன்னர் அவர் அந்த உரையை நிகழ்த்தினார். அமெரிக்கா எப்போதுமே அமைதியைத்தான் நாடுகிறது என்றும் சிறந்த எதிர்காலத்திற் காக முயற்சி எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, "அமெரிக்க படை பலத்தின் பிரதிபலிப்பான நீங்களே எதிரிகளிடம் அனைத்து தெரிவுகளையும் எடுத்துகாட்ட வேண்டும்" என்று அமெரிக்க ராணுவ வீரர்களிடம் அவர் தெரி வித்தார்.
சுதந்திரமும் பெருமையுமுள்ள தென்கொரிய மக்களோடு அமெ ரிக்கா சேர்ந்து வலுவாக நிற்கும் என்று துணை அதிபர் உறுதி பூண்டார். வடகொரியா அதன் அணுவா யுத ஏவுகணைத் திட்டத்தைக் கைவிடும்வரை அதிகபட்ச நெருக்கடியை அமெரிக்கா தொட ரும் என்று திரு பென்ஸ் கூறி னார்.

