ஜகார்த்தாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு

ஜகார்த்தாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு

1 mins read
dedbf4e0-1ad8-4c83-8580-8c2a3f56f12a
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் தாக்கிய வெள்ளத்திலிருந்து மீண்டுவரும் நிலையில் மீண்டும் கனமழையால் வெள்ளமும் நிலச் சரிவும் ஏற்படும் வாய்ப்புகள் இருப் பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெள்ளத்தை ஏற்படுத்திய அள விற்கு அடுத்த வாரம் வரையிலா வது கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் வரையிலும் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆக அதிகமான அளவு மழை இந்த மாதம் பெய்யும் என்றும் இந்தோ னீசியாவின் வானிலை, பருவநிலை அமைப்பு அதன் வாராந்திர வானிலை முன்னுரைப்பில் கூறியுள் ளது.

ஜகார்த்தாவையும் அதன் புற நகர்ப் பகுதிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழ மையும் தாக்கிய கனமழையைப் போல அடுத்த சில தினங்களிலும் அதுபோன்ற நிலைமையை எதிர் பார்க்கலாம் என்று அமைப்பின் வானிலைப் பிரிவு தலைவர் முல்யோனோ பிரபாவோ நேற்று தெரிவித்தார்.

இன்று பலத்த காற்றுடனும் இடியுடனும் ஜகார்த்தாவில் கன மழை பெய்யும் என்று அந்த அமைப்பு முன்னுரைத்துள்ளது. குறிப்பாக தெற்குப் பகுதிகளையும் கிழக்குப் பகுதிகளையும் பலமாகத் தாக்கும் என்றும் இதர பகுதிகளில் மிதமான அளவு மழையை எதிர் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.