மலேசியாவில் கொள்ளை; கணவன், மனைவி கைது

மலேசியாவில் கொள்ளை; கணவன், மனைவி கைது

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியா வில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த கணவன், மனைவியை போலிசார் கைது செய் துள்ளனர். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அத்தம்பதியர் கைது செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள் உட்பட 300,000 ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை யும் ரொக்கப் பணத்தை யும் போலிசார் கைப்பற்றிய தாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அக் கும்பலைச் சேர்ந்த மற்ற மூன்று பேரை போலிசார் தேடி வருகின்றனர்.