ஐஎஸ் குழுவைச் சேர்ந்த இரு பிரிட்டிஷ்காரர்கள் கைது

ஐஎஸ் குழுவைச் சேர்ந்த இரு பிரிட்டிஷ்காரர்கள் கைது

1 mins read

வா‌ஷிங்டன்: ஐஎஸ் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த பிரிட்டிஷ்காரர்கள் இருவரை சிரியாவில் உள்ள குர்தியப் போராளிகள் கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித் தனர். குர்தியப் போராளிகளிடம் பிடிபட்டவர்கள் 34 வயது அலெக்சாண்டா கோட்டே மற்றும் 29 வயது எல் ஷஃபி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. "பீட்டல்ஸ்" என்று அழைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் பிடிபடாமல் இருந்துவந்த கடைசி உறுப்பினர்கள் இந்த இருவர் மட்டுமே என்று அமெரிக்கா கூறியது.