சோல்: வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று தென்கொரியா வந்து சேர்ந்தார். 1950-1953 கொரிய போருக்குப் பிறகு கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முறையாக தென் கொரியா வந்துள்ளார். கிம் யோ ஜோங்குடன் வட கொரியாவின் விழாக் குழுத் தலைவர் கிம் யோங் நாமும் 22 பேர் கொண்ட வடகொரியக் குழுவினரும் தென்கொரியா வந்துள்ளனர்.
விமான நிலையத்தில் அவர் களை தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ மயோங் ஜியோன் வர வேற்றார். திருமதி கிம் யோ ஜோங் கிற்கும் அவரது குழுவினருக்கும் தென்கொரிய அதிபர் இன்று அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்தளிக்க வுள்ளார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு மிகவும் நெருக்க மானவரும் அவரைவிட நான்கு வயது இளையவருமான திருமதி கிம்மிற்கு சென்ற ஆண்டு அரசாங்கத்தில் உயர் பதவி வழங்கப்பட்டது. வட கொரியாவில் நடக்கும் மனித மீறல் சம்பங்களில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதன் காரணமாக அமெரிக்கா அறிவித்துள்ள கறுப்புப் பட்டியலில் திருமதி கிம்மின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

