அமெரிக்க அரசாங்கம் மீண்டும் முடங்கியது

அமெரிக்க அரசாங்கம் மீண்டும் முடங்கியது

1 mins read
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: புதிய வரவு செலவுத் திட்ட செலவின மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் வியாழக் கிழமை நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் நேற்று ஐந்து மணி நேரம் முடங்கி யதாகத் தகவல்கள் கூறின. அரசாங்கம் செயலிழப்பதைத் தவிர்க்க அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று ஈராண்டு வரவு செலவுத் திட்ட மசோதவை நிறைவேற்றியது. அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் புதிய வரவு செலவு திட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட வேண்டியுள்ளது.

அதன் பின்னரே அரசாங்கப் பணிகள் தொடரும் என்று கூறப் படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியது. முன்னதாக புதிய வரவு செலவுத் திட்ட மசோதாவை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் தவறியதால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த மத்திய நிதி காலாவதியாவதற்குள் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.