தாய்லாந்தில் நால்வருக்கு கைது ஆணை உத்தரவு

தாய்லாந்தில் நால்வருக்கு கைது ஆணை உத்தரவு

1 mins read
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்தில் ஜனநாயக ஆதரவு தொண்டர்கள் நால்வரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது அங்குள்ள ஒரு நீதிமன்றம். தாய்லாந்து ராணுவம் கொடுத்த வாக்குறுதிப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அந்த நால்வரைக் கைது செய்ய ஆணை பிறக்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். தேர்தல் இந்த ஆண்டு திட்டமிட்ட தேதியில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்ற மாதம் பேங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நான்கு தொண்டர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அந்த நால்வரில் ஒருவர் நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட தாக போலிசார் கூறினர்.