ஜகார்த்தா: பாத்தாம் அருகே மீன்பிடிப் படகு ஒன்று இந் தோனீசிய கடற்படையிடம் பிடி பட்டது. 1 டன் போதைப்பொருள் அப்படகில் ஏற்றப்பட்டிருந்ததாக இந்தோனீசியா தெரிவித்தது. அரிசி சாக்கு மூட்டைகளுக்குள் அந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டதாக ஊள்ளூர் ஊடகத் தகவல் கூறுகிறது. தைவானிய சிப்பந்திகள் ஓட்டிவந்த "எம்வி சன்ரைஸ் குளோரி' என்று பெயிரிடப்பட்ட அந்தப் படகில் சிங்கப்பூர் கொடி பறந்ததாகவும் கூறப்பட்டது. சிங்கப்பூர் நீரிணைப் பகுதியில் இந்தோனீசிய கடல் பகுதிக்குள் அப்படகு நுழைந்ததும் இந் தோனீசிய ரோந்துப் படகு ஒன்று அதனை வழிமறித்து விசாரித்த தில் அப்படகு சிப்பந்திகளிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது என்று இந்தோனீசியா தெரிவித் தது.
பல பெயரில் அப்படகை சிப்பந்திகள் பயன்படுத்தியிருக் கலாம் என்றும் போதைப் பொருட்களைக் கடத்த அப்படகு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என் றும் அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர். ஒவ்வொரு நாட்டைக் கடக்கும் போதும் அந்தந்த நாட்டுக் கொடியை சிப்பந்திகள் பறக்க விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

