ஹாங்காங் பேருந்து விபத்து: மரணம் பற்றி விசாரணை

ஹாங்காங் பேருந்து விபத்து: மரணம் பற்றி விசாரணை

1 mins read
a585958d-653f-4970-9b33-3fcb41db76ce
-
Google News Preferred Icon

ஹாங்காங்கில் வடக்கு பகுதியில் உள்ள தாய் போ என்ற நகருக்கு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்து பற்றி தாங்கள் முழுமூச்சாக புலன்விசாரணை நடத்தி வருவதாக ஹாங்காங் போலிஸ் தெரிவித்தது. மாடிப் பேருந்து ஓட்டுநர், ஒருவர், 30, அந்த வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டியதில் பேருந்து குடைசாய்ந்துவிட்டது. 19 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பேருந்தில் இருந்த பெரும்பாலானவர்கள் குதிரைப் பந்தய ரசிகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி