யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மூண்ட கலவரத்தின் போது பிடிபட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பில் ராணுவ வீரர்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மியன்மார் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ராணுவ விசாரணையின் ஒரு பகுதியாக சட்டப்படி 7 ராணுவ வீரர்கள், மூன்று போலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களில் 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அப்பேச்சாளர் சொன்னார். அந்த 16 பேர் மீதும் எத்தகைய நடவடிக்கை எடுக் கப்படும் என்பதை அவர் தெரி விக்கவில்லை.
ராக்கைன் மாநிலத்தில் கடந்த மாதம் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த ரோஹிங்யா போராளிகள் பத்து பேர் பாதுகாப்புப் படையினரை தாக்கியதைத் தொடர்ந்து பெளத்த சமயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் நீளமான கத்திகளைக் கொண்டு போராளிகளில் சிலரைத் தாக்கியதாகவும் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்ற போராளிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

