ரஷ்ய விமானத்தில் சென்ற 71 பேரும் விபத்தில் பலி

ரஷ்ய விமானத்தில் சென்ற 71 பேரும் விபத்தில் பலி

1 mins read
0120383b-9528-4c95-8857-1790251d06d0
-

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் புறப்பட்ட சில நிமிடங் களில் பனிப்பிரேதச பள்ளத்தாக்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விபத்தில், விமானத்தில் சென்ற சிப்பந்திகள் உட்பட 71 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். விமான விபத்துக்கான காரணத்தை அறிய ரஷ்ய அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கு பருவநிலை காரணமா? அல்லது மனிதத் தவறா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்பது குறித்து புலன்விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதல் சாத்தியம் குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புக் குழுவினரும் போலிசாரும் தீயணைப்பாளர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்