கொரியா உறவினர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு

கொரியா உறவினர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு

1 mins read

சோல்: கொரியப் போரின்போது பிரிந்த இரு கொரியாக் களையும் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற வினர்கள் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து உயர் மட்டக் குழு ஒன்று மூன்று நாள் பயணமாக தென் கொரியா வந்து சென்ற பின்னர் தென்கொரிய ஒருங் கிணைப்பு அமைச்சு வெளி யிட்ட அறிக்கையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில் இரு கொரியாக்களையும் சேர்ந்த உறவினர்கள் சந்திப் பது நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது இரு கொரியாக்களுக்கும் இடை யில் உறவு மேம்பட்டு வரு கிறது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தலைமையில் வடகொரிய குழுவினர் தென் கொரியாவுக்கு வருகை அளித்தது முதல் இரு கொரி யாக்களுக்கும் இடையே உறவு மேம்பட்டுள்ளது.