தென்னாப்பிரிக்க அதிபர் ஸுமா பதவி விலக ஆளும் கட்சி வலியுறுத்து

தென்னாப்பிரிக்க அதிபர் ஸுமா பதவி விலக ஆளும் கட்சி வலியுறுத்து

1 mins read
Google News Preferred Icon

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸுமா பதவி விலக மறுத்ததைத் தொடர்ந்து அவர் அவசியம் பதவி விலக வேண்டும் என்று தென்னாப்பிரிக்க ஆளும் ஏஎன்சி கட்சி அவரிடம் கேட்டுக்கொள்ளவிருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 75 வயதாகும் அதிபர் ஸுமா பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்து வரும் நிலையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. அந்த வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடையக்கூடும் என்று கூறப்படுகிறது.