அமெரிக்க ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக் கான இரண்டாவது உத்தேச வரவு செலவுத் திட்டத்தில் ராணுவ செலவுக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அத்துடன் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த மெக்சிகோ சுவர் எழுப்புவதற்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தவும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரவு செலவுத் திட்டத்தில் ராணுவ செலவு மற்றும் ஆயுதக் குவியல் சேகரிப்புக்கு 716 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியும் எல்லைப் பாதுகாப்புக்கு 23 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியும் புதிய வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக் கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளின் மிரட்டல்களுக்கு எதிராக அமெரிக்கா அதன் ராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்ள ராணுவ செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திரு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் ராணுவ செலவுக்கு பெரும் தொகை ஒதுக்கப்பட்டிருப் பது இதுவே முதல் தடவை.