தென்கொரியாவை பாராட்டிய வடகொரியத் தலைவர் கிம்

1 mins read

சோல்: தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்த வடகொரியக் குழுவினரை தென் கொரியா வரவேற்ற விதம் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். இரு கொரியாக்களுக்கு இடையில் இதுபோன்ற நட்பார்ந்த சமரச நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் திரு கிம் கேட்டுக்கொண்டார். திரு கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் தலைமையில் வடகொரியக் குழுவினர் தென் கொரியாவுக்கு சென்று வந்த பின்னர் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவிலிருந்து திரும்பிய குழுவினரை திரு கிம் சந்தித்துப் பேசிய பின்னர் அவர் இவ்வாறு கூறியதாக வடகொரிய செய்தி நிறுவனம் ஒன்று கூறு கிறது. வடகொரியக் குழுவினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அந்த அறிக்கை தமக்கு திருப்தி அளிப்பதாக திரு கிம் கூறியுள்ளார்.