தென்கொரிய முன்னாள் அதிபரின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை

தென்கொரிய முன்னாள் அதிபரின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை

1 mins read

சோல்: தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்- ஹையின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அரசாங்க விவகாரத்தில் தலையிட்டு ஆதாயம் பெற்ற குற்றத்திற்காக அவர்கதக் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோய் சூன் சில், அதிபருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று ஆதாயம் அடைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் அதிபர் பார்க் கியூன் ஹைக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சோய் சூன் சில்லுக்கு உடந்தையாக இருந்ததாக திருவாட்டி பார்க் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.