பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் குவைத்திலிருந்து திரும்ப உத்தரவு

பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் குவைத்திலிருந்து திரும்ப உத்தரவு

1 mins read

குவைத்: குவைத்தில் பணி யாற்றிய பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 29 வயது பெண் ஜோன்னா டிமாஃபிலிஸ் உட்பட பல பெண்கள் மரணம் அடைந்த தைத் தொடர்ந்து குவைத்திற்கு பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் அனுப் பப்படுவதற்கு அந்நாட்டு அதிபர் டுட்டர்டே தடை விதித்துள்ளார். துபாயில் மரணம் அடைந்த ஜோன்னாவின் உடல் அவரது முதலாளி வீட்டில் உள்ள ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் கடந்த புதன்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாக அந்தப் பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடு களில் பணியாற்றும் பிலிப்பீன்ஸ் ஊழியர்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளை அதிபர் டுட்டர்டே எடுக்கத் தொடங்கியுள்ளார். குவைத்தில் பணியாற்றும் பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும் என்று அவரது நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பிலிப்பீன்ஸ் திரும்பு வதற்கு வசதியாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் இலவச விமானச் சேவைகளை தொடங்கியுள்ளது. பிலிப்பீன்ஸ் நாட்டு ஊழியர் கள் 276,000 பேர் குவைத்தில் பணியாற்றுவதாக குவைத்திய வெளியுறவு அமைச்சு தெரிவித் துள்ளது. நேற்று வரை 900 ஊழியர்கள் குவைத்திலிருந்து மணிலா திரும்பியிருப்பதாகவும் இன்னும் பலர் பிலிப்பீன்ஸ் திரும்புவதற்கு காத்திருப்பதாகவும் கூறப் படுகிறது.