தென்னாப்பிரிக்காவில் குப்தாவின் குடும்ப வீட்டில் சோதனை

தென்னாப்பிரிக்காவில் குப்தாவின் குடும்ப வீட்டில் சோதனை

1 mins read

ஜோகனஸ்பர்க்: ஊழல் விவ காரங்களில் சிக்கியுள்ள தென் னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸ`மா பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில் அவரின் நெருங்கிய நண்பரான குப்தாவின் குடும்ப வீட்டில் தென்னாப்பிரிக்க மின்னல் படை போலிசார் நேற்று அதிரடி சோதனை செய்ததாகவும் அந்த சோதனையின்போது குப்தாவின் சகோதரர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக வும் ஊடகத் தகவல்கள் கூறின.

இந்தியாவில் பிறந்த பெரும் செல்வந்தரான குப்தாவும் அவரது குடும்பத்தினரும் அதிபர் ஸ`மாவு டன் தங்களுக்குள்ள நெருக்க மான நட்பைப் பயன்படுத்தி அதிக மாக அரசியல் ஆதாயம் அடைந்த தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிபர் ஸ`மாவும் குப்தா குடும்பத்தினரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் வேளையில் அவ்விருவருக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரு கின்றன.

இந்நிலையில் ஜோகனஸ்பர்க் கில் உள்ள குப்தாவின் குடும்ப வீட்டில் நேற்று காலை போலிசார் அதிரடி சோதனை மேற் கொண்டதாக தகவல்கள் கூறின. திரு ஸ`மாவுக்கும் குப்தா குடும் பத்தினருக்கும் உள்ள தொடர்பின் ஒரு பகுதியாக அவர்களின் வீடு சோதனை செய்யப்பட்டதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.