இந்தோனீசியா-சிங்கப்பூர் கூட்டுத் திட்டங்களில் நல்ல முன்னேற்றம்

இந்தோனீசியா-சிங்கப்பூர் கூட்டுத் திட்டங்களில் நல்ல முன்னேற்றம்

1 mins read

செமாராங்கில் உள்ள ஊழியர் களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தோனீசியாவுடன் சேர்ந்து சிங்கப்பூர் அமைத்துவரும் பல துறைத் தொழில்கல்லூரி கிட்டத் தட்ட முடியும் தறுவாயில் இருக் கிறது. அதோடு, மத்திய ஜாவாவில் கூட்டாக அமைக்கப்படும் கெண் டல் தொழிற்பேட்டையில் கடை அமைக்க அதிகமான வாடகை தாரர்கள் முன்வந்துள்ளனர். ஜகார்த்தாவுக்குச் சென்றுள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ண னுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, இந்தோனீசிய வெளியுறவு அமைச் சர் ரெட்னோ மர்சுடி செய்தியாளர் களிடம் இவ்விவரங்களை வெளி யிட்டார்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப் பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சென்ற செப்டம்பர் மாதம் சிங்கப் பூரில் சந்தித்தபோது, கெண்டலில் பலதுறைத் தொழில்கல்லூரி அமைக்கும் யோசனை முன்வைக் கப்பட்டது. இந்தத் தொழில்கல்லூரி "77 விழுக்காடு தயாராகிவிட்ட தாக" திருவாட்டி ரெட்னோ கூறி னார். அதோடு, கெண்டல் தொழிற் பேட்டையில் தொழில் தொடங்க மேலும் நான்கு வாடகைதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இருநாட்டுத் தலைவர்களும் 2016 நவம்பரில் இந்தக் கூட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின், இதுவரை மொத்தம் 36 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்தோனீசியாவின் ஜபாபெகா நிறுவனமும் சிங்கப்பூரின் செம்ப் கார்ப் நிறுவனமும் கூட்டுத் திட்டத் தைச் செயல்படுத்துகின்றன.