கோலாலம்பூர்: அந்நிய செலாவணி முதலீட்டு திட்ட மோசடிக் கும்ப லுடன் தொடர்புடைய தம்பதியை மலேசிய போலிஸ் தேடி வருகிறது. சுமார் 100 கோடி ரிங்கிட் மதிப் பிலான இந்த மோசடி தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் மூவரை வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. சுமார் 35 வயதுக்கும் 49 வயதுக்கும் உட்பட்ட அந்த மூவர் கைது செய்யப்பட்டதோடு 13 ஆடம்பர வாகனங்கள், மூன்று 'சூப்பர் பைக்' மோட்டார் சைக்கிள்கள், 10 தங்கக் கட்டிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கு எதிராக 116 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இவர்களுடன் சம்பந்தப்பட்ட மேலும் 17 பேரின் வங்கிக் கணக் குகள் உள்பட 38 வங்கிக் கணக் குகளை போலிசார் முடக்கியுள்ள னர். மேலும் முக்கிய நபர்களான 55 வயது பாண்டியன் மருதமுத்து மற்றும் அவருடைய மனைவி கௌரி பாஸ்குனி, 56 ஆகிய இருவரையும் போலிசார் தேடி வருகின்றனர் என்று வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்கு நர் அமார் சிங் தெரிவித்தார்.

