ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தீவிரவாத தாக்குதல்களை மேற் கொள்ளும் வகையில் மற்றவர் களைத் தூண்டிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார் அந்நாட்டு மத போதகர் அமன் அப்துர் ரஹ்மான். கடந்த 2016ஆம் ஆண்டு நான்கு பேரை பலி வாங்கிய ஜகார்த்தா தீவிரவாத தாக்குதல் உட்பட இந்தோனீசியாவில் பல் வேறு தீவிரவாத தாக்குதல்களை இவர் தூண்டியதாகக் கூறப்படுகி றது. தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அமன், அங்கிருந்தபடியே ஜகார்த்தா தாக்குதலுக்கு வழி காட்டியாக இருந்துள்ளார். அத்தாக்குதலுக்கு பின்னர் அமனின் சிறை அறையை சோத னையிட்ட போலிஸ் அதிகாரிகள், அங்கிருந்து பல கைபேசிகளை கைப்பற்றினர்.
மரண தண்டனையை எதிர்நோக்கும் மத போதகர் அமன் அப்துர் ரஹ்மானை ஆயுதமேந்திய போலிசார் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். படம்: ஏஎஃப்பி

