கடல் வளங்களுக்கு சீன பெயர் சூட்ட பிலிப்பீன்ஸ் எதிர்ப்பு

கடல் வளங்களுக்கு சீன பெயர் சூட்ட பிலிப்பீன்ஸ் எதிர்ப்பு

1 mins read

மணிலா: தங்களது கடல் வளங் களுக்கு சீனப் பெயர்கள் சூட் டப்படுவதற்கு பிலிப்பீன்ஸ் அர சாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் சீனா சொந்தம் கொண்டாடும் 'பிலிப் பீன்ஸ் ரைஸ்' பகுதி கடலடி வளங்களுக்கு சீனா பெயர் சூட்டுவது தொடர்பில் பிலிப்பீன்ஸ் ஏற்கெனவே சீனாவிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது இப்பிரச்சினை தொடர்பாக ஐநாவிடமும் அதிகாரப் பூர்வமாக பிலிப்பீன்ஸ் முறையிடும் என்றும் தெரிகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கடல் வளங்களுக்கு சூட்டப்படும் பெயர்களைப் பதிவு செய்யும் அனைத்துலக கடல் பகுதிகளை ஒன்றிணைக்கும் அமைப்பிடம் இதுபற்றி பிலிப்பீன்ஸ் தெரிவிக்கும் என்று கூறியுள்ளார் அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ரோக். சீனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள ஐந்து புதிய கடல் வளப் பகு திகளும் கடந்த 2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடலடி ஆய் வின்போது கண்டறியப்பட்டதாக சீனா கூறுவதாக ரோக் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள் ளார். இந்தப் பெயர்களுக்கு அனைத் துலக நீராய்வியல் அமைப்பு கடந்த 2017ஆம் ஆண்டு ஒப்புதல் அளித் துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.