லேகோஸ்: நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி நகரில் உள்ள மீன் சந்தையில் நேற்றிரவு தற்கொலைப் படையைச் சேர்ந்த போராளிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததாகவும் 70 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நைஜீரியாவில் தாக்குதல்: பலர் பலி
1 mins read

