மெக்சிகோவை உலுக்கிய 7.2 ரிக்டர் நிலநடுக்கம்

மெக்சிகோவை உலுக்கிய 7.2 ரிக்டர் நிலநடுக்கம்

1 mins read
7b34733b-9008-4707-bb93-be0235d57e2d
-

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவை நேற்று முன்தினம் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியபோது பல கட்டடங்கள் ஆட்டம் கண்டதால் பதற்றம் அடைந்த மக்கள் அங் கிருந்து தப்பியோடி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறு கின்றன. பாதுகாப்பு கருதி மருத்துவமனை ஒன்றிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட வில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின்போது மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் சிலர் வெளியேற்றப்பட்டனர். படம்: ஏஎஃப்பி