ஃபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு; புலனாய்வுத் துறைக்கு நெருக்குதல்

ஃபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு; புலனாய்வுத் துறைக்கு நெருக்குதல்

1 mins read
477d5e45-b283-41c7-9d24-3d5b9d834916
-
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: ஃபுளோரிடாவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்து 17 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற முன்னாள் மாணவரான நிக்கலஸ் குரூஸ் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வேளையில் அவனை கண்காணிக்கத் தவறிய மத்திய புலனாய்வுத் துறை நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. குரூஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது மத்திய புலனாய்வுத் துறைக்கு முன்னதாகவே தெரிந்திருந்தும் அவனது நடவடிக்கையை கண்காணிக்கத் தவறியதற்காக எஃப்பிஐ மீது பலர் குறை கூறி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கதறி அழுதனர். படம்: ஏஎஃப்பி