இந்தோனீசிய பணிப்பெண்களை மலேசியாவுக்கு அனுப்புவது நிறுத்தப்படலாம்

இந்தோனீசிய பணிப்பெண்களை மலேசியாவுக்கு அனுப்புவது நிறுத்தப்படலாம்

1 mins read

ஜகார்த்தா: மலேசியாவில் பணிப்பெண் வேலைக்கு இந் தோனீசியப் பெண்களை அனுப்பு வதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து இந்தோனீசியா சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்தோனீசிய பணிப்பெண் ணான 21 வயது அடிலினா லிசா சென்ற வாரம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இந்தோனீசிய பணிப்பெண்களை மலேசியாவுக்கு அனுப்புவது குறித்து இந்தோனீசியாவில் சர்ச்சை நீடிக்கிறது.

அந்த இந்தோனீசிய பணிப் பெண்ணின் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் அப்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தப் பெண் கடந்த ஒரு மாத காலமாக அவரது முதலாளி யால் சித்திரவதைக்கு ஆளான தாகவும் வீட்டுக்கு வெளியில் உறங்கும்படி அவரை கட்டாயப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.