டெஹ்ரான்: ஈரான் நாட்டில் பயணி கள் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஈரானின் தலைநகர் டெஹ் ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நக ரத்திற்கு நேற்று அஸீமான் விமான நிறுவனத்தின் பயணிகள் விமா னம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 60 பயணிகள், 6 விமான பணி யாளர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்குப் புறப் பட்ட விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரேடார் திரையில் இருந்து மாயமானது.
இதனை அடுத்து மேற்கொள்ளப் பட்ட தேடுதல் வேட்டையின்போது, யசூச் நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனா மலையில் மோதி விபத்துக் குள்ளானது தெரிய வந்தது. விமானத்தில் இருந்த 66 பேரின் நிலைமை குறித்து உறுதி யான தகவல் எதுவும் இல்லை என்று விமான நிறுவனம் அறி வித்துள்ளது. மோசமான வானிலை காரண மாக மீட்பு நடவடிக்கைகள் பாதிக் கப்பட்டுள்ள நிலையில், விமானத் தில் இருந்த அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் அஞ்சப்படுகிறது.

