காசா மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல்; பாலஸ்தீனர்கள் இருவர் கொல்லப்பட்டனர்

காசா மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல்; பாலஸ்தீனர்கள் இருவர் கொல்லப்பட்டனர்

1 mins read
0221aab1-3be2-445f-ad3e-bebd89ea0f22
-
Google News Preferred Icon

ஜெருசலம்: காசாவில் இஸ்ரே லிய வீரர்கள் நான்கு பேர் காயம டைந்தற்குப் பதிலடியாக இஸ் ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் இரு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட் டனர். முன்னதாக இஸ்ரேல், காசா எல்லை அருகில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந் தனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் பாலத்தீன கொடி பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்ட ராணுவம், அங்குத் துருப்புகள் நெருங்கியபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடந்த போருக்குப் பிறகு, எல்லை யில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் இது என இஸ்ரேலிய ஊடகங்கள் விவரிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு சம் பவத்திற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடும் பாலஸ்தீனர்கள். படம்: ஏஎஃப்பி