திபெத்: புராதன சின்னமான பௌத்த கோயிலில் தீ விபத்து

திபெத்: புராதன சின்னமான பௌத்த கோயிலில் தீ விபத்து

1 mins read
8fcfa383-dd30-43e1-a644-a13960aaa0a2
-
Google News Preferred Icon

லாசா: திபெத்தில் உள்ள புராதன சின்னமான 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பௌத்த சமய கோயிலில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திபெத் நாட்டின் தலைநகர் லாசாவில் ஜோகாங் என்ற கோயில் உள்ளது. இது பௌத்த சமயத்தின் புனித கோவிலாகும். இந்தக் கோவில் கடந்த 2000ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய தலமாக அறி விக்கப்பட்டது. இந்தக் கோவிலில் புத்தரின் 12 வயது உருவச் சிலை உட்பட பல விலைமதிப்புமிக்க அரிய பொருட்கள் இங்குள்ளதாக கூறப் படுகிறது.

உள்நாடு மற்றும் வெளிநாடு களில் இருந்தும் ஆயிரக்கணக் கான சுற்றுலாவாசிகள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலில் நேற்று முன் தினம் இரவு திடீரென மூண்ட தீ விண்ணை முட்டும் அளவிற்குக் கொழுந்து விட்டு எரிந்தது. இத னால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந் தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தீயி னால் கோயிலுக்கு ஏற்பட்ட சேத விவரங்களும் தெரியவில்லை. பெரிய அளவில் ஏற்பட்டுள்ள இந்தத் தீ விபத்தினால் வருங் காலத்தில் கோவிலின் நிலைப் பற்றிய அச்சம் எழுந்துள்ளது.

திபெத்தின் ஜோகாங் பௌத்த சமய கோயிலில் தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது எடுத்த காணொளி இணையத்தில் பரவியது. காணொளிப் படம்