இந்தோனீசியாவில் மூன்று தொழிற்பூங்காக்களை உருவாக்க அந்நாடு சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதை நேற்று தெரிவித்த அந்நாட்டு தொழில் துறை அமைச்சர் அயர்லாங்கார் ஹர்டார்டோ, அந்தத் தொழிற்பூங் காக்களை வடக்கு கலிமந்தான் பகுதியின் தானா டுனிங் தொழிற் பூங்கா, வடக்கு சுலாவேசியில் உள்ள குவாலா தஞ்சோங் தொழிற் பூங்கா, பித்துங் தொழிற்பூங்கா என அவற்றை அடையாளம் காட்டினார்.
மேலும், இவை இந்தோனீசியா வின் மத்திய ஜாவா பகுதியில் உள்ள கெண்டல் தொழிற்பூங்கா வைப் போல் நாட்டிலுள்ள மற்ற தொழிற்பூங்காக்களை ஒத்திருக் கும் என்று தெளிவுபடுத்தினார். "இந்தோனீசியாவின் நலன் களில் முக்கிய பங்கு வகிக்கும் அண்டை நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது," என்று திரு அயர் லாங்கார் ஹர்டார்டோ கூறியதாக இந்தோனீசியாவின் கொம்பாஸ் இணையத்தளம் தெரிவித்தது.

