லங்காவி கம்பிவட சேவை

லங்காவி கம்பிவட சேவை

1 mins read
c6392160-e623-4af6-896b-ce66a29019ef
-

கோளாறு பற்றி விசாரணை லங்காவி: மலேசியாவின் லங்காவி தீவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.50 மணியளவில் கம்பிவட (கேபிள் கார்) சேவையில் ஏற்பட்ட கோளாறுக்கு என்ன காரணம் என்பது முழுமையாகக் கண் டறியப்படும் என்று அந்த சேவையை நடத்தி வரும் பனரோமா லங்காவி சென் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித் துள்ளது. கம்பிவட சேவையில் நேற்று முன்தினம் திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுலாப் பயணிகள் சுமார் 1,048 பேர் மற்றும் கேபிள் கார் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 78 பேரும் தவிக்க நேர்ந்ததாக தகவல்கள் கூறின. தகவல் அறிந்து அவ் விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினரும் தீயணைப் பாளர்களும் கம்பிவட கார்களுக் குள் சிக்கியிருந்த பயணிகளையும் ஊழியர்களையும் அன்றிரவு 9 மணியிலிருந்து கட்டம் கட்டமாக காப்பாற்றினர்.

லங்காவியில் கேபிள் கார்களுக்குள் சிக்கிக்கொண்ட சுற்றுலாப் பயணிகளையும் அந்த சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களையும் தீயணைப்பாளர்கள் காப்பாற்றினர். கேபிள் கார்களைத் தாங்கிச் செல்லும் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை கம்பிவட சேவை பாதிக்கப்பட்டதாக கம்பிவட சேவையை வழங்கி வரும் நிறுவனம் தெரிவித்துள்ளது. படம்: பெர்னாமா