சீனாவின் முயற்சிக்கு எதிராக மாற்றுத் திட்டம்; இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பேச்சு

சீனாவின் முயற்சிக்கு எதிராக மாற்றுத் திட்டம்; இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பேச்சு

1 mins read

சிட்னி: சீனா பல பில்லியன் டாலர் செலவினான போக்கு வரத்து கட்டமைப்புத் திட்டம் குறித்து அறிவித்துள்ள நிலை யில் மாற்றுத் திட்டம் குறித்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பேச்சு நடத்தி வருவ தாகத் தெரிகிறது. சீனா அதன் செல்வாக்கைப் பரப்ப முயற்சி மேற்கொள்ளும் வேளையில் அந்த முயற்சிக்கு எதிராக வட்டார உள்ளமைப்பு வசதியை மேம்படுத்துவது குறித்து அந்த நான்கு நாடுகளும் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஆஸ்திரேலியத் தகவல் கூறியது. ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லும்போது அந்த மாற்றுத் திட்டம் குறித்து அமெரிக்க அதிபருடன் பேச்சு நடத்த விருப்பதாகக் கூறப்படுகிறது. ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றை போக்கு வரத்து கட்டமைப்பு மூலம் இணைக்கும் 124 பில்லியன் டாலர் திட்டம் பற்றி சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்ற ஆண்டு மே மாதம் அறிவித்தார்.