இந்தோனீசியாவில் எரிமலைச் சீற்றம்

இந்தோனீசியாவில் எரிமலைச் சீற்றம்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபுங் எரிமலை தற்போது கடும் சீற்றத்துடன் காணப் படுகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்துள்ள இந்தப் புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு கி.மீ. தூரம் வரை பரவியுள்ளது. எரிமலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதியில் விமானங்கள் இயக்கப்படுவதற்கும் இந்தோனீசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.