ஈப்போ: நிழல் உலக குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 36 பேர் மீது மலேசியாவில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. 'ஆப்ரேஷன் கேன்டாஸ்' என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மலேசிய போலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டை யின்போது 20 முதல் 60 வயதிற் குட்பட்ட 36 பேர் கைது செய்யப் பட்டனர். பேராக், சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை யில் 26 பேரும் கெடா, பத்து கஜா, மலாக்கா போன்ற இடங்களில் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட னர்.
ரகசியமாக செயல்பட்டு வந்த 'கேங் 4' என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த இவர்கள் நேற்று நீதிமன் றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட னர். அப்போது கொலை, கொள்ளை, போதைப்பொருள் எனப் பல குற் றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இரு வெவ்வேறு கொலை வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப் படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையின்போது தப்பிச் சென்று விட்ட மேலும் 10 பேரை தேடி வருவதாக போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

