சிரியா தாக்குதலில் 100 பேர் பலி

சிரியா தாக்குதலில் 100 பேர் பலி

1 mins read
8759c610-fe3d-4db7-9ce2-f8c545db552a
-

டமாஸ்கஸ்: சிரியாவில் போராளி களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரை மீட்க அந்நாட்டு ராணுவப் படைகள் மேற்கொண்ட தாக்கு தலில் கிட்டதட்ட 100 பேர் பலியாகியிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் ஆயுதம் தாங் கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்குக் கவுட்டா பகுதி கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து புரட்சிப் படை வசம் உள்ளது. போராளிகளின் வசம் உள்ள அந்தக் கடைசி பகுதியை மீட்பதற் காக சிரியா படைகள் நேற்று முன் தினம் கடும் தாக்குதல் நடத் தின. வான் வழித் தாக்குதல், ஏவு கணை தாக்குதல், பீரங்கித் தாக் குதல் என நீண்ட நேரம் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியா ராணுவத் தின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இத்தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி