கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை கேலிச் சித்திரமாக வரைந்து இணையத்தளத்தில் வெளியிட்ட ஓவியர் பாஹ்மி ரேசாவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் 30,000 ரிங்கிட் அபராதமும் விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் திரு நஜிப்பிற்கு எதிராக மலேசியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அந்த கேலிச்சித்திரம் பயன்படுத்தப்பட்டதை பலரும் கவனித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த ஓவியர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சட்டத்தை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது. இந்நிலையில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக பாஹ்மியின் வழக்கறிஞர் கூறினார்.
மலேசிய பிரதமரை கேலிச்சித்திரமாக வரைந்த ஓவியருக்கு சிறை
1 mins read

