குவைத்திலிருந்து மணிலா திரும்பும் ஊழியர்கள்

குவைத்திலிருந்து மணிலா திரும்பும் ஊழியர்கள்

1 mins read
25de9b21-fa47-4d76-a167-e0a424f6912d
-

மணிலா: குவைத்தில் பணியாற்றும் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாக புகார்கள் எழுந் ததையடுத்து இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் பணியாற்றிய பிலிப்பீன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவரின் சடலம் ஒரு குளிர் சாதனப் பெட்டிக்குள் இம்மாதம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸ் ஊழியர் கள் குவைத் செல்வதற்கு பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே தடை விதித்தார். அங்குள்ள பிலிப்பீன்ஸ் நாட்டு ஊழியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் குவைத்தில் வேலை செய்யும் பிலிப்பீன்ஸ் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள பிலிப்பீன்ஸ் குழுவினர் இன்று குவைத் செல்ல இருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறினார்.

குவைத்திலிருந்து திரும்பிய பிலிப்பீன்ஸ் நாட்டு ஊழியர்கள் மணிலாவில் உள்ள விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். குவைத்தில் 252,000 பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பணிப்பெண்களாக பணியாற்றுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்