வாஷிங்டன்: 'பம்ப் ஸ்டாக்' எனப்படும் ஒரு வகை இயந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத் திட்டுள்ளார். சென்ற ஆண்டு லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியில் 58 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன் பயன்படுத்தி யது இந்த வகை இயந்திர துப்பாக்கிதான். அதே போல கடந்த சில தினங் களுக்கு முன் நடந்த ஃபுளோரிடா பள்ளிக்கூட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிக்காரன் பயன்படுத்தியதும் இந்த வகை இயந்திர துப்பாக்கிதான் என்று கூறப்பட்டது.
வெள்ளை மாளிகையில் பேசிய திரு டிரம்ப், பம்ப் ஸ்டாக் இயந்திர துப்பாக்கிகள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கும் புதிய விதிமுறைகளை தயார் செய்யுமாறு நீதித்துறையை தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்ற தோற்றத்தை உண்டாக்கு வதற்காக மட்டும் நாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்று கூறிய திரு டிரம்ப், உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

