ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் பங்குகொள்ளும் வடகொரிய குழுவினர்

ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் பங்குகொள்ளும் வடகொரிய குழுவினர்

1 mins read
Google News Preferred Icon

சோல்: தென்கொரியாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள வடகொரியா உயர் மட்டக்குழுவை அங்கு அனுப்புவுள்ளது. வடகொரிய ஆளும் கட்சியின் தலைவர் கிம் யோங் சோல் தலைமையில் 8 பேர் கொண்ட வடகொரிய குழுவினர் வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு செல்லவுள்ளனர். தென்கொரியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகன் இவாங்கா டிரம்ப்பும் கலந்துகொள்ளவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிகாரிகளை இவாங்கா சந்தித்துப் பேசுவதற்கான சாத்தியம் இல்லை என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சை வடகொரியக் குழுவினர் சந்தித்துப் பேசுவதை கடைசி நேரத்தில் ரத்து செய்தது வடகொரியா. இதனால் இந்த முறையும் அமெரிக்க குழுவினரை வடகொரிய குழுவினர் சந்தித்துப் பேசமாட்டார்கள் என்று தெரிகிறது.