ஆஸ்திரேலியாவில் சதித் திட்டம் முறியடிப்பு; இஸ்ரேல் உதவியது

ஆஸ்திரேலியாவில் சதித் திட்டம் முறியடிப்பு; இஸ்ரேல் உதவியது

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சென்ற ஆண்டு ஒரு விமானத்தை தகர்க்க பயங்கர வாதிகள் திட்டமிட்டிருந்த நிலை யில் அவர்களின் சதித் திட்டத்தை முறியடிக்க இஸ்ரேல் உதவியது. இத்தகவலை அவ்விரு நாடுகளும் உறுதிப்படுத்தி யுள்ளன. சிட்னியிலிருந்து அபு தாபிக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றை தகர்க்கத் திட்ட மிட்டிருந்ததாக இரு சகோதரர் கள் மீது ஆஸ்திரேலியப் போலிசார் கடந்த ஜூலை மாதம் குற்றம் சாட்டினர். அந்த சகோதரர்களின் சதித் திட்டத்தை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேலிய உளவுத் துறை அதி காரிகள் அதுபற்றி ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தியதால் உரிய நேரத்தில் அந்த சதித்திட்டம் முறியடிக் கப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது தெரிவித்துள்ளார்.