இந்தோனீசிய நிலச்சரிவில் 14 பேர் காயம்

இந்தோனீசிய நிலச்சரிவில் 14 பேர் காயம்

1 mins read
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் நெல் விளையும் வயல்களுக்கு அருகே உள்ள சரிவுப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் காயம் அடைந்ததாகவும் இன்னும் 11 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். காணாமற்போனவர்கள் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் என்று பேரிடர் நிவாரண அமைப்பு ஒன்றின் பேச்சாளர் கூறினார். மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக அப்பேச்சாளர் சொன் னார். நிலச்சரிவில் காயமடைந்த விவசாயிகள் 14 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.