வாஷிங்டன்: ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் பள்ளிக் கூடங்களில் நடக்கக்கூடிய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். துப்பாக்கி வைத்திருக்கும் ஒரு ஆசிரியரால் மிக விரைவில் தாக்குதலைத் தடுக்க முடியும் என்று திரு டிரம்ப் கூறியுள்ளார். இம்மாதம் 14ஆம் தேதி ஃபுளோரிடாவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஃபுளோரிடா சம்பவத்தில் பாதிக் கப்பட்டவர்கள் கேட்டுக்கொண் டதை அடுத்து திரு டிரம்ப் இந்த யோசனையைத் தெரிவித்தார். அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும் என்றும் மேலும் அவர்களின் மனநலம் குறித்து கண்டறியப்படும் என்றும் ஃபுளோரிடா பள்ளி மாண வர்களிடம் திரு டிரம்ப் உறுதி யளித்தார்.
ஃபுளோரிடா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிர் தப்பிய மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர். துப்பாக்கி வன்முறை குறித்து தனது கருத்தை தெரிவித்த மாணவர் ஒருவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்

