ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பதவி விலகுகிறார்

ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பதவி விலகுகிறார்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். முன்னாள் ஊழியர் ஒருவருடன் அவருக்கு ரகசிய உறவு இருப் பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் திங்கட்கிழமை தேசிய கட்சியின் தலைமை பொறுப்பி லிருந்து விலகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. திரு மால்கம் டர்ன்புல்லின் லிபரல்-தேசிய கூட்டணி அர சாங்கம் கூடுதலாக ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதர வைப் பெற்று ஆட்சியில் நீடித்து வருகிறது. திரு ஜாய்சுக்கு திருமணமாகி சுமார் 24 ஆண்டுகள் ஆகின்றன.